நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விவசாயிகள் மீது டிரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸார்

புது டெல்லி: 

வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்ட உத்தரவாதம் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளக் மீது ஹரியாணா போலீஸார் டிரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக டிரோன் மூலம்  ஹரியாணா போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மனிதாபிமானற்ற முறையில் ஒன்றிய அரசு செயல்படுவதாக கண்டனங்கள் வலுத்து வருகின்றது. 

Indian police fire tear gas as protesting farmers march on Delhi

பஞ்சாப் எல்லைக்குள் இருந்த விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸார் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதற்கு பஞ்சாப் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. விவசாய அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னதாக, ஹரியாணா எல்லையான ஷம்புவில் தடுப்பு வேலிகளால் விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் விவசாயிகள் தடுப்புகளை நீக்கியும், இரும்பு முள் வேலிகளை நீக்கியும் முன்னேறினர். அவர்களைத் தடுக்க போலீஸார் ட்ரோன்கள் மூலம் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். அதன்பின் மூர்க்கத்தனமாக தடியடி நடத்தினார்கள்.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset