
செய்திகள் தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்-இல் ஸ்பேமைத் தடுக்கப் புதிய அம்சம் அறிமுகம்
கலிப்போர்னியா:
வாட்ஸ்அப் செயலியில் ஸ்பேம்-ஐ (Spam) லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளோக் செய்யும் புதிய வசதி வழங்கப்பட இருக்கின்றது.
ஸ்பேம் எனப்படும் தேவையற்ற குறுந்தகவல்கள் தொடர்ச்சியாக அதிகளவில் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இதனை எதிர்கொள்ளும் வகையிலும் பயனர்களுக்குத் தகவல் அனுபவத்தில் அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் வகையிலும் இந்த அப்டேட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பயனர்களை ஏமாற்றும் தகவல்கள் அடங்கிய ஸ்பேம் தகவல்கள் வாட்ஸ்அப்-இல் அதிகளவில் அனுப்பப்பட்டு வருவது பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தி வந்தது.
இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர் தனியுரிமை, பாதுகாப்பை அதிகப்படுத்தும் முயற்சியாக புதிய அம்சம் அமைந்துள்ளது.
இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யாமல், நேரடியாக லாக் ஸ்கிரீனில் இருந்தபடி ஸ்பேம் மெசேஜ்களைப் பிளோக் செய்ய முடியும்.
இதற்கு ஸ்பேம் நோட்டிஃபிகேஷனை அழுத்திப்பிடித்து பிறகு திரையில் தெரியும் பல்வேறு ஆப்ஷன்களில் பிளாக் செய்யக் கோரும் ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம்.
ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்வதோடு அவற்றை ரிபோர்ட் செய்யும் ஆப்ஷனும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm
விண்ணிலிருந்து மண்ணில் கால்பதித்தார் சுபான்ஷு சுக்லா
July 3, 2025, 4:36 pm