
செய்திகள் மலேசியா
சீனப் பெருநாளை முன்னிட்டு கொள்ளை லாபம் அடிக்கும் விரைவு பேருந்துகள்; நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்து அமைச்சு என்ன செய்கிறது?: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேள்வி
பினாங்கு:
ஜோகூர்பாருவிலிருந்து கோபெங்கிற்குப் பயணித்த ஒரு பயணி சீனப் பெருநாளுக்கு முன் ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைனில் வாங்கிய அவரது பேருந்து டிக்கெட்டுக்கு 270% முதல் 344% வரை கட்டணம் விதிக்கப்பட்டதைக் கண்டு பி.ப.சங்கம் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது.
அந்த பயணி 10.2.24 அன்று பயணம் செய்ததற்காக ஜோகூரிலிருந்து கோபேங்கிற்கு 190 ரிங்கிட் வசூலிக்கப்பட்டது, மேலும் கோப்பேங்கிலிருந்து ஜோகூருக்கு திரும்பும் பயணத்திற்கு 241.00 ரிங்கிட்செலுத்தியுள்ளார்.
பஸ் டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதால், விரைவு பஸ் சேவைக்கான உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இப்படி கொள்ளை லாபம் அடிப்பவர்களை அமைச்சு ஏன் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்துள்ளது?
ஒரு திருமண நிகழ்விற்காக கோபேங்கில் தன்னைச் சந்திக்க நேர்ந்த பி.ப.சங்க அதிகாரியிடம் அவர் அதிக கட்டணம் வசூலித்த பேருந்துக் கட்டணத்தை தனிப்பட்ட முறையில் புகார் செய்தார்.
திருவிழாக் காலங்களில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று பேருந்துத் துறையினருக்கு போக்குவரத்து அமைச்சர் பலமுறை எச்சரித்திருந்தும் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் மனம்போன போக்கில் கட்டணம் வசூலிப்பதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இத்தகைய சுரண்டல் உண்மையிலேயே அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது.
விரைவு பேருந்து நிறுவனங்கள் பண்டிகைகள் என்ற பெயரில் பயனீட்டாளர்களிடமிருந்து அதிக லாபம் ஈட்டுகின்றன.
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் விரைவு பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சை பி.ப.சங்கம் வலியுறுத்த விரும்புகின்றது.
விரைவுப் பேருந்தை விரும்புபவர்களில் பெரும்பாலானோர் பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை அமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பேருந்து நிறுவனங்களால் சுரண்டப்படும் பயணிகளுக்கு போக்குவரத்து அமைச்சு எத்தகைய பாரபட்சமும் பார்க்காமல் கடுமையான நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும் என்று பி ப சங்கம் வலியுறுத்தி உள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm