நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொருளாதார விவகாரத்தில் காரணங்களை அடுக்குவதால் என்ன பயன்?: ரஃபிசிக்கு புவாட் கேள்வி

கோலாலம்பூர்:

நாட்டின் பொருளாதார விவகாரத்தில் சாக்கு போக்கான காரணங்களை கூறுவதால் யாருக்கு என்ன பயன்? என்று பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லியை நோக்கி அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காசி கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ரஃபிசி ரம்லி யாங் பாக்கார் மந்திரி எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய ரஃபிசி, பொருளாதாரத்தை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்குப் பதிலாக காரணங்களையும் மட்டுமே அடுக்கிக்கொண்டு பேசி இருக்கிறார். இதனால் யாருக்கு என்ன பயன்? பிரச்சினைகளுக்கு அவர் என்ன தீர்வளிக்க இருக்கிறார்?

தற்போது ரிங்கிட்டின் மதிப்பு வலுவிழந்து வருகிறது. அடிப்படைப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வாகன விலைகள் அதிகரித்து வருகின்றன என்பதுதான் யதார்த்தம்.

இந்த  சிக்கல்களில் ஒன்றைக் குறைக்கும் முயற்சிகளையும் திட்டங்களையும் கூறப்படவில்லை.

ஆனால் அதற்கான காரணங்கள் மட்டும் பரவலாக கூறப்படுகிறது. இதுபோன்ற சாக்குகளைக் கேட்டு மக்கள் சோர்வடைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை ரஃபிசி தன்னை பிரபலப்படுத்த ஒரு வித்தனியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று புவாட் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset