நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டி: கத்தார் மீண்டும் சாம்பியன்

தோஹா:

ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
கத்தார் அணியினர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

லூசாய்ல் அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கத்தார் அணியினர் ஜோர்டான் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கத்தார் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

கத்தார் அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் அக்ரம் அஃபிவ் ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.

குறிப்பாக ஜோர்டான் ஆட்டக்காரர்கள் செய்த தவற்றால் கத்தார் அணிக்கு இரு பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை தொடர்ந்து கத்தார் அணியினர் ஆசியக் கிண்ணத்தை மீண்டும் தற்காத்து கொண்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset