நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உத்தராகண்ட் மாநிலத்தில் மதரஸா இடிப்பு: வன்முறையில் 2 பேர் மரணம் 

ஹல்த்வானி: 

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரஸாவையும் மஸ்ஜிதையும் இடித்ததன் தொடர்பாக வெடித்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். போலீசார் பொதுமக்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவும், கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் தடைசெய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி: 
உத்தராகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி பகுதியில்  கட்டப்பட்டிருந்த மதரஸாவை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை மேற்கொண்டனர். 

அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

அங்குள்ள பன்பூல்புரா பகுதியில் சுமார் 2 கி.மீ பரப்பிலான ரயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தில் வசித்து வரும் இஸ்லாமிய மக்களை அங்கிருந்து வெளியேற நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து போராடிய மக்கள், சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. 

Shoot on sight orders in Uttarakhand locality after demolition drive sparks  tension in Haldwani | India News - The Indian Express

வரும் 14-ம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது. இதை மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இருந்தும் அவர்கள் விடாப்பிடியாக மக்களை விரட்ட ஆரம்பித்தனர்.

 நாட்டிலேயே முதல் முறையாக, உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நைனிடால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த கலவரத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர், அவர்களில் பலர் போலீஸார். ஹல்த்வானியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரத்தில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. 

சிலருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. சிலருக்கு அவகாசம் வழங்கப்படவில்லை.

கால அவகாசம் வழங்கப்படாத இடங்களில் பொதுப்பணி துறையினர் மற்றும் நகராட்சியினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். இது தனிப்பட்ட முறையில் யாருக்குமோ அல்லது சொத்துக்களுக்கு எதிரான செயலோ இல்லை. ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்த இடம் இரண்டு அடுக்குகளைக் கொண்ட காலி நிலம். அது எந்த மத அமைப்பாகவும் பதிவு செய்யப்படவில்லை அல்லது அப்படியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அந்த சொத்துக்கள் மீது தடை ஏதும் இல்லாததால் நாங்கள் ஆக்கிரமிப்பு அகற்றதைத் தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்தோம்.

At least four dead as religious riots break out over demolition of mosque  in India | The Independent

பல இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருவதால், இங்கேயும் நாங்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபட்டோம். 

பாதுகாப்புக்காக போலீஸார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். 

அந்த கும்பல்தான் முதலில் கற்களை வீசிவிட்டு சென்றது. இரண்டாவதாக வந்த கும்பலிடம் பெட்ரோல் குண்டுகள் இருந்தன. எங்களுடைய குழு எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை.

மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரகலாத் மீனா கூறுகையில், "மதரஸாவும், மசூதியும் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டது, நீதிமன்ற உத்தரவுப்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன" என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset