நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குவைத்தில் இருந்து மும்பைக்கு மீன்பிடி படகில் வந்த தமிழர்கள்

மும்பை: 

குவைத்திலிருந்து மீன்பிடி படகில் மும்பைக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 மூவரை போலீஸார் கைது செய்தனர்.

மும்பை போலீஸார் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த விசைப்படகை சுற்றிவளைத்தனர்.

படகில் இருந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்து கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் மூவரும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் வினோத் அந்தோணி, சகாய அந்தோணி அனிஷ், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நிதிஷோ டிதோ என்பதும் தெரியவந்தது.

பிடிபட்ட மூவரும் குவைத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை செய்து வந்ததும், அவர்களை அழைத்துச் சென்ற முகவரின் மோசமான நடவடிக்கை காரணமாக அங்கிருந்து மீன்பிடி படகில் தப்பித்து இந்தியா வந்ததும் தெரியவந்தது.

குவைத்தில் இருந்து புறப்பட்டு சவூதி அரேபியா, கத்தார், துபாய், மஸ்கட், ஓமன், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக தெரிகிறது. படகில் இருந்து கைப்பற்றப்பட்ட ஜிபிஎஸ் மூலம் அவர்கள் வந்த் பாதை தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset