நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புது டெல்லி மெட்ரோ ரயில் சுவர் இடிந்து ஒருவர் மரணம் 

புதுடெல்லி:

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் கோகுல்புரி மெட்ரோ நிலையத்தின் பிளாட்பாரத்தின் பக்கச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த வினோத்குமார் (53) என்பவர் பலியானார் . 

மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சாலை மூடப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது சாலையில் ஏராளமானோர் இருந்தனர். 

விபத்துக்குப் பிறகு, தற்போது இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ஒற்றைப் பாதையில் இயக்கப்படுகிறது. 

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு டிஎம்ஆர்சி ரூ.15 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.50 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset