நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளை அரசு கண்காணிக்கிறது

புத்ராஜெயா:

பள்ளி மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும்.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ  ஜாஹிட் ஹமிடி தலைமையிலான தேசிய சமூக வாரிய கூட்டத்திற்கு பின் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நான்சி சுக்ரி இதனை தெரிவித்தார்.

இடைநிலையில் பயிலும் மாணவர்கள் பாதியில் கல்வியை நிறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

கடந்தாண்டு மட்டும் 14,506 மாணவர்கள் படிப்பை கைவிட்டுள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பள்ளி மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளை அரசு கண்காணிக்கிறது.

நிபந்தனைகள், வேலை நேரங்களுக்கு இணங்க இன்னும் பள்ளி மாணவர்களை பணியமர்த்தும் முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset