நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப், குடும்பத்தாரின் கோரிக்கைக்கு இணங்க மன்னிப்பு கோரி புதிய விண்ணப்பம்: ஜாஹித்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் நஜீப்பின் குடும்பத்தாரின் கோரிக்கைக்கு இணங்க மன்னிப்பு கோரி மீண்டும் புதிய விண்ணப்பம் செய்யப்படவுள்ளது என்று துணைப்பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.

அவருக்கு முழு மன்னிப்பு வழங்கப்படாத விவகாரம் தொடர்பில் பேசிய ஜாஹித் இந்த விவகாரத்தில் மாமன்னர், அரச மன்னிப்பு வாரியம் எடுத்த முடிவை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம் என்றார்.

நஜீப், அவரின் குடும்பத்தாரின் கோரிக்கைக்கு இணங்க மன்னிப்பு கோரி புதிய விண்ணப்பம் செய்யப்படவுள்ளது என்று துணைப்பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ  நஜீப் துன் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனை பாதியாக குறைக்கப்பட்டது.

அதே வேளையில் அவருக்கு முழு மன்னிப்பு வழங்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் மாமன்னர், அரச மன்னிப்பு வாரியம் எடுத்த முடிவை நாங்க முழுமையாக மதிக்கிறோம்.

மேலும் நஜீப் அவரது குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் முழு மன்னிப்பு கோரி புதிய விண்ணப்பம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பின்னர் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் மதிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாங்கள் நஜீப், அவரது குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கும் திசையில் இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset