நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மை ஏர்லைன்ஸ் முதலீட்டாளர்களுடன் அந்தோனி லோக் சந்திப்பு 

புத்ராஜெயா:

மை ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முதலீட்டாளர்களை தாம் சந்தித்தாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

நாட்டில் குறைந்த  கட்டண விமான நிறுவனமாக மை ஏர்லைன்ஸ் விளங்கி வந்தது.

ஆனால் நிதி நெருக்கடியின் காரணமாக அவ்விமான நிறுவனம் சேவையை நிறுத்தியது.

இந்நிலையில் அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய மத்திய கிழக்கு நாடுகளின் முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

உள்ளூர் நிறுவனத்துடன் கூட்டமைப்பை அமைத்து அவர்கள் விமான நிறுவனத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களை நான் சந்தித்தேன். 

மை ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான முடிவை தெரிவிக்க அவர்கள் வந்தார்கள் என்று அந்தோனி லோக் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset