
செய்திகள் வணிகம்
மலேசிய ரிங்கிட்டின் வீழ்ச்சிக்கு ஊழலும் அரசியல் நெருக்கடியும் தான் காரணம்
பெட்டாலிங் ஜெயா:
அரசியல் நெருக்கடி, பலவீனமடைந்து வரும் பொருளாதாரம், ஊழல் ஆகியவை மலேசிய ரிங்கிட்டின் சரிவுக்கு வழிவகுக்கும் காரணங்களாகும்.
அதிகமான அமெரிக்க வட்டி விகித்தாலும் உள்ளூர் நாணயத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடருவதில் அரசாங்கம் உறுதியாக இருந்தால், ரிங்கிட்டின் மதிப்பு மீண்டும் உயரக் கூடும் என்று முவாமாலாட் வங்கியின் ஆராய்ச்சித் தலைவர் அஃப்ஸானிசம் ரஷித் கூறினார்.
திங்களன்று 1 அமெரிக்க டாலர் 4 ரிங்கிட் 75 சென்னுக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்காலத்தில் இந்த மதிப்பு 5 ரிங்கிட் வரை வர்த்தகம் செய்ய வாய்ப்புகள் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவின் பசிபிக் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆலோசகர் ஓ எய் சன், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐ.நா பொதுச் சபைக்காக அமெரிக்காவுக்குப் பயணம் செய்தபோது அன்வார் இப்ராஹிம் கூறிய கருத்துகள் மிகவும் வேதனையானவை என்று கருதுகின்றார்.
பல்வேறு உள்நாட்டுப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதால் தான் சட்டசபையில் கலந்து கொள்ளாமல் இருக்க நினைத்ததாக அன்வார் அப்போது கூறியிருந்தார்.
நியூயார்க்கில் தான் சந்தித்த அமெரிக்க வணிகங்கள் மலேசியாவில் வணிகம் செய்வது சிக்கலானதுஎன்று புகார் கூறியதையும் அன்வார் குறிப்பிட்டதை ஓ நினைவு கூர்ந்தார்.
இதனால், முதலீட்டாளர்கள் அதிக வருமானத்திற்காக தங்கள் பணத்தை வேறு இடங்களில் வைப்பதாக அவர் கூறினார்.
நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்கும் வரை, ரிங்கிட் தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்று அவர் மேலும் கூறினார்.
வளர்ந்த நாடுகளில் குறைந்த வருமானம் மற்றும் குறைந்த வணிக அபாயங்களுக்கு இடையே உள்ள சமநிலையை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாக ஓ கூறினார்.
சந்தைகள் மற்றும் மத்திய வங்கிகளுக்கு இடையே நடந்து வரும் போராட்டம் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை தீவிரப்படுத்தியுள்ளது என்று அப்சானிசம் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am