நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மன்னர் ஷாஜகானின் நினைவு தினத்துக்கு தடை விதிக்க வழக்கு

ஆக்ரா:

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை கட்டிய முகலாய மன்னர் ஷாஜகானின் நினைவு தினத்தை அனுசரிக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 6 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு தடை கோரி அகில பாரத ஹிந்து மகாசபை வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய்  கூறுகையில், தொழுகை, நினைவு தின அனுசரிப்பு நிகழ்வுகளை தாஜ் மஹாலில் நடத்த அனுமதியளித்தது யார் என இந்திய தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு முகலாயர் காலத்திலோ, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலோ அல்லது இந்திய அரசோ இதற்கு அனுமதி வழங்கவில்லை என ஏஎஸ்ஐ தெரிவித்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மார்ச் 4ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset