செய்திகள் தொழில்நுட்பம்
4ஆவது ஆசியான் இலக்கவியல் அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் கோபிந்த் சிங்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் நடைபெற்ற 4ஆவது ஆசியான் டிஜிட்டல் அமைச்சர்கள் மாநாட்டில் மலேசியா இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து சிறப்பித்தார்.
இக் கூட்டத்தில் சிங்கப்பூர் தகவல் தொடர்பு, கவல் பிரிவு அமைச்சர் ஜோசிபின் தியோ, அமெரிக்கா அமைச்சர் நதானியேல் சி. ஃபிக்வ் சீன தொழில், தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சர் ஷாங் யுன்மிங், ஜப்பானிய உள்நாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்புக்கான மாநில அமைச்சர் கோய்சி வாட்னாப், சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் டோரேன் போக்டான் ஆகியோரையும் சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் அந்த நாடுகளைச் சேர்ந்த தமது சகாக்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாக அவர் சொன்னார்.
இத் துறையில் மலேசியா உலகளாவிய நிலையில் முன்னேற்றம் காண எடுத்துவரும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளைத் தாம் விவரித்ததாகவும் 2025ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 25.5 விழுக்காடு வருவாயைப் பெற ஒரு மில்லியன் தொழில் முனைவோருக்கு அது சார்ந்த பயிற்சியை வழங்கியிருப்பதாகவும் அதில் 280 ஆயிரம் மகளிர் தொழில் முனைவோரும் அடங்குவார்கள் என்றார்.
5ஜி அலைக்கற்றை தொடர்பில் நாடு 8.2 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றிருப்பதாகவும் அது வெகு விரைவான வளர்ச்சி பெற்று வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த வளர்ச்சியானது 5ஜி அலைக்கற்றை உபகரணங்கள் குறைந்த விலையில் கிடைப்பதே முக்கிய காரணமாகும் என விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசியான் நாடுகள் பரஸ்பரம் ஒத்துழைத்து தகவல்களைப் பரிமாறிக் கொண்டால் இத் துறையில் பெரும் வளர்ச்சியை அடைய முடியும் என அவர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 6:41 pm
AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை
November 5, 2025, 5:43 pm
இந்தியாவில் இனி ChatGPT Go சேவை இலவசம்: மாதக் கட்டணம் ரத்து
October 29, 2025, 7:07 am
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
