நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விஜய்யின் கட்சி பெயரில் திராவிடம் இல்லாததே மகிழ்ச்சி தான்: சீமான் மகிழ்ச்சி 

சென்னை:

விஜய்யின் கட்சி பெயரில் திராவிடம் இல்லாததே மகிழ்ச்சிதான் என்று நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

நடிகர் விஜய்,  விஜய் மக்கள் இயக்கம்  மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். 

இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு  தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளார். 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,

மண் ஆள்வதற்கு முன்னால், தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும்.

அதே வேளையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் நன்றாக உள்ளது.

கட்சி பெயரில் திராவிடம் என்ற சொல் இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே பெரிய மாறுதல் தான் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset