நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

2026 தேர்தல் தான் இலக்கு; சினிமாவில் இருந்து விலகுகிறார் விஜய்

சென்னை:

முழுமையாக அரசியலில் ஈடுப்படுத்திக் கொள்வதால் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக  விஜய் அறிவித்தார்.

தமிழக அரசியலில் களமிறங்கியுள்ள விஜய், தமது கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல. அது ஒரு புனிதமான மக்கள் பணி.

அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல. அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகிறேன்.

ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு திரைப்படத்தை கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்து விட்டு, முழுமையான மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்.

அதே வேளையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் விரும்பும் அடிப்படை அரசியலில் மாற்றத்துக்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடவில்லை.

குறிப்பாக எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset