நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதலீட்டாளர்களால் மலேசியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு 5 விழுக்காடு வரை உயரும்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபடில்லா யூசுஃப்  

கோலாலம்பூர்: 

உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களால் மலேசியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு 5 விழுக்காடு வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ  ஃபடில்லா யூசுஃப் கூறினார். 

KSI துணைத்தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால் ராவுத்தர் தலைமையில் 2024ஆம் ஆண்டுகான உலக பொருளாதார மற்றும் திட்டமிடல் கூட்டத்தில் பேசிய துணைப் பிரதமர் அரசாங்கம் அறிமுகப்படுத்திய திறன்வாய்ந்த முக்கிய திட்டங்களின் வாயிலாக மலேசியாவின் பொருளாதாரம் நல்ல தடத்தில் இருக்கும் வேளையில் இவ்வாண்டு அதன் வளர்ச்சி தொடரும் என்று அவர் கூறியுள்ளார். 

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சுமார் 225 பில்லியன் ரிங்கிட் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளோம். இதனால் பொருளாதாரம் நிலையானது 6.6 விழுக்காட்டிற்கு அதிகரித்தது என்று 2024ஆம் ஆண்டுகான உலக பொருளாதார மற்றும் திட்டமிடல் கூட்டத்தில் பங்கேற்று அவர் இவ்வாறு தெரிவித்தர். 

May be an image of 5 people and text that says "GLOBAL MEDIA EXCELLENCE AWARD FEATURES FOR INTERNATIONAL NEWS Star"

May be an image of 11 people and text that says "The 2024 Global conom and Forum Strategic Outlook S"

மடானி பொருளாதார கொள்கை, புதிய தொழிற்துறை திட்டம் 2030, 12ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய ஆய்வின் பகுப்பாய்வுகள் ஆகியவை வெளிநாட்டு முதலீட்டு நடவடிக்கைக்கு ஏதுவாக அமைந்துள்ளதை டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோப் சுட்டிக்காட்டினார். 

இந்த நிகழ்வில் ஸ்டார் மீடியா குழுமத்திற்கு GLOBAL MEDIA EXCELLENCE AWARDS விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை SMG தலைமை அதிகாரி டத்தின் படுக்கா எஸ்தர் எங் பெற்றுக்கொண்டர். 

இந்த விருதை டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் வழங்கிய நிலையில் உடன் KSI தேசிய தலைவர் டான்ஶ்ரீ மைக்கல் இயோ, KSI நிர்வாகி டான்ஶ்ரீ டத்தோ மஜித் கான், KSI எனும் மலேசிய பொருளாதார வியூக மன்றத்தின் துணைத்தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால் ஆகியோர் நிகழ்வினை சிறப்பித்தனர்.

- மவித்ரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset