நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூட்டரசுப் பிரதேச தினம்: நாளை தொடங்கி ஞாயிறு வரை டத்தாரான் புத்ரா ஜெயாவில் அனுசரிக்கப்படும்

கோலாலம்பூர் : 

இவ்வாண்டிற்கான கூட்டரசு பிரதேச தினம் 2024டத்தாரான் புத்ரா ஜெயாவில் நாளை தொடங்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும்.

புத்ரா ஜெயா கழகம் மற்றும் புத்ரா ஜெயா இலாகா ஆகிய துறைகளின் கூட்டு முயற்சியில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் துறைக்கான கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

மக்கள் அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கு ஏதுவாக ஒரே நிகழ்ச்சியில் அனைத்து அரசு துறைகளையும் ஒன்று சேர்க்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி 2024-ஆம் ஆண்டு கூட்டரசு தினம், கூட்டரசு பிரதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கூட்டரசு பிரதேசக் கழகம் உருவாக்கம் கண்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இவ்வாண்டுக்கான கூட்டரசுப் பிரதேச நிகழ்ச்சியில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கேட்டுக் கொண்டார். 

புத்ரா ஜெயா கழகம் மட்டுமின்றி, அனைத்து அமைச்சுகள், அரசு துறைகள், அரசு நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் பொது நிறுவனங்கள் மற்றும் சொத்துடைமைத் துறைகளும் இதில் பங்கேற்கவுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இவ்விரு நிகழ்ச்சிகளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

விலாயா மடாணி, ராக்யாட் ஹர்மோனி (நாகரீக பிரதேசம், நல்லிணக்க
மக்கள்) எனும் கருப்பொருளிலான 2024-ஆம் ஆண்டு கூட்டரசுப் பிரதேசத் தினம் கொண்டாடப்படுகின்றது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset