நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சிங்கப்பூர் தக்கலை சங்கத்தின் ஞானப்புகழ்ச்சி நிகழ்ச்சி 

சிங்கப்பூர்:

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் 1939 இல் தக்கலை சங்கத்தை சிங்கப்பூரில் நிறுவி சமூக சேவையாற்றி வருகிறார்கள். சிங்கப்பூர் உணவு வகைகளில் பிரபலமான ரோஜாக் உணவின் தயாரிப்பு முன்னோடிகளாய் இருந்து இன்றுவரை அதன் சுவையை தனித்தன்மையோடு கையாளும் தக்கலை மக்கள் சிங்கப்பூரின் சமூக மற்றும் தமிழ் இலக்கியத்திற்கும் பங்காற்றி வருகிறார்கள். 

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பும் அடையாளமும் இருப்பதைப்போல தக்கலை என்றதும் ஞானமேதை பீர் முஹம்மது அப்பா என்கிற இறைநேசரின் நினைவு மேலோங்கும். தென்காசியில் பிறந்த சூஃபி ஞான மேதையான அவருடைய மரபுக்கவிதைகளால் ஆன ஞானப்புகழ்ச்சி மிகச் சிறந்த படைப்பு. 

தமிழ்நாட்டில் பல பல்கலைக் கழகங்கள் ஹசரத் பீர் முஹம்மது அப்பா அவர்களின் ஞானப்புகழ்ச்சியை தங்களுடைய தமிழ் இலக்கிய பாடத் திட்டத்தில் சேர்த்துள்ளன. 

ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய மாதமான ரஜப் மாதத்தில் ஷேய்கு பீர் முஹம்மது அப்பா அடக்கமாகி இருக்கும் தக்கலை தர்காவில் ஞானப்புகழ்ச்சி நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெறும். 

அதைக் காதாறக் கேட்டு அனுபவிக்க தமிழ்நாடு, கேரளா, அண்டை மாநிலங்களில் இருந்தும் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இருந்தும் மக்கள் பயணப்பட்டுச் செல்வர். 

அதே நாளான, கடந்த ஜனவரி 25 ந்தேதி சிங்கப்பூர் டன்லப் தெரு அப்துல் கபூர் பள்ளிவாசல் பன்னோக்கு அரங்கில் ஞானப்புகழ்ச்சி நிகழ்ச்சியை சிங்கப்பூர் தக்கலை முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. 

பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஞானப்புகழ்ச்சி பாடப்படுவதை கேட்டு மகிழ்ந்தனர். 

முனைவர் எச். எம். சலீம், பீர் முஹம்மது அப்பா அவர்களைப்பற்றியும், ஞானப்புகழ்ச்சியின் சிறப்புகளையும் அவரது கவிதைகளின் மேன்மையைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் செயலவையினர் சிறப்பாக செய்திருந்தனர். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் இணை அமைப்பினர் பலரும் கலந்து சிறப்பித்தனர். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset