நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிழக்கு மலேசியாவில் வானிலை மோசமாக இருக்கும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

கோலாலம்பூர்: 
கிழக்கு மலேசியா பகுதிகளில் பிப்ரவரி 2ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கன மழையும் பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சபா, சரவாக் புறநகர் மற்றும் உட்புற பகுதிகளில் பெய்த கனமழைகளைப் பகுபாய்வு செய்ததுடன் இந்த கனமழையும் பலத்த காற்றும் நீண்ட நாட்களுக்கு கிழக்கு மலேசியா பகுதியில் இருக்கும் என்று மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் முஹம்மத் ஹெல்மி அப்துல்லா கூறினார். 

கடல் அலைகளும் பெருமளவில் உயரும் சாத்தியமும் இருப்பதாக வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது. 

பொதுமக்கள் வானிலை தொடர்பான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று ஹெல்மி சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset