நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவு விலையை கண்காணிக்கும் சிறப்பு செயற்குழுவிற்கு சையத் ஹுசேன் நியமனம்; அன்வார் இப்ராஹிம் நடவடிக்கை 

கோலாலம்பூர்: 

உணவு விலை, வாழ்க்கை செலவீன தொடர்பான சிறப்பு செயற்குழுவிற்கு புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் அபு ஹுசேன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரால் நியமிக்கப்பட்டுள்ளார். 

வாழ்க்கை செலவீன சிறப்பு நடவடிக்கை மன்றத்திற்கும் சையத் ஹுசேன் பொறுப்பேற்ப்பார் என்று அன்வார் இப்ராஹிம் கூறினார். 

சையத் ஹுசேன் NACCOL மன்றத்திற்கு உறுதுணையாக செயல்படுவார். மக்களின் அன்றாட வாழ்க்கை செலவீனங்களை அரசாங்கம் அறிந்துள்ளதுடன் இந்த சிறப்பு செயற்குழு அமைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். 

மேலும், JUALAN MADANI திட்டத்தையும் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் விரிவுப்படுத்தவும் அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளதாக தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் செய்தியாளர்களிடம் சொன்னார். 

நாட்டின் அன்றாட தேவைக்குப் பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் விலைகளை நிலையாக வைத்துக்கொள்ள பல்வேறான அளவுகோல்களை அரசாங்கம் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset