நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் கல்வி முறையில்  உள்ள தொய்வுகளை  மறுக்க முடியாது: பிரதமர்

கோலாலம்பூர்: 

நாட்டின் கல்வி முறையில் உள்ள தொய்வுகளை மறுக்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கடந்தாண்டின் சர்வதேச மாணவர் மதிப்பீட்டில் மலேசியாவின் மதிப்பெண்கள் குறைந்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கல்வி முறை கவலையளிக்கும் வகையில் உள்ளது.

கடந்த கால வெற்றிகள் மீது கவனம் செலுத்தாமல் போனதே இந்த தோல்விக்கான காரணமாக உள்ளது.

இந்த பின்னடைவுக்கு கோவிட்-19 தொற்றை ஒரு காரணமான சொல்லலாம்.

ஆனால் லாவோஸ், கம்போடியா, இந்தோனேசிய உட்பட பல நாடுகளும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டன.

அப்படி என்றால் இந்த மதிப்பெண்ணில் நாம் ஏன் தோல்வியடைந்தோம்? 
எதிர்காலத்தைத் தொடங்குவதற்கு முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் இவை என்று மலாயா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset