நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொங்கல் மேடையை பிரதமர் அரசியல் பேச்சுக்கு பயன்படுத்துவதா?:  பெர்சத்து சாடல்

கோலாலம்பூர்:

பொங்கல் மேடையை அரசியல் பேச்சுக்கு பயன்படுத்திய பிரதமரை பெர்சத்து கட்சி சாடியுள்ளது.

கடந்த சனிக்கிழமை கிள்ளான் நடைபெற்ற பொங்கள் விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அந்நிகழ்வில் பேசிய பிரதமர், பெரும் புள்ளிகளுக்கு எதிரான எம்ஏசிசி நடவடிக்கை குறித்து பேசினார்.

குறிப்பாக பொங்கல் விழா மேடையில் அரசியல் மேடையாக அவர் பயன்படுத்திக் கொண்டார்.

பொங்கல் கொண்டாட்டத்தை பிரதமர்  தனது எதிரிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துவதற்குப் பதிலாக,

மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தை மேம்படுத்த முயற்சிக்க ஒரு மேடையாகப் பயன்படுத்தி இருக்கலாம்.

துன் மகாதீர்,  துன் டைமிற்கும் எதிரான நடவடிக்கைக்கும் பொங்கல் பண்டிகைக்கும் என்ன சம்பந்தம் என்று பாங்கி பெர்சத்து சயாப் பிரிவின்  தலைவர் வசந்தகுமார் கேள்வி எழுப்பினார்.

பொங்கல் கொண்டாட்டம் ஒரு அரசியல் மேடை அல்ல என்பதை  அன்வார் உணரவில்லை,

மேலும் இந்திய சமூகத்திற்கான தொலைநோக்குப் பார்வையைப் பற்றி பேசவும், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்புகளில் பின்தங்கிய இந்தியர்களுக்கு உதவுவதற்கான அரசாங்கத்தின் கொள்கைகளைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கவும் அன்வார் இந்த மேடையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset