நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நம் நாட்டு வீரர்கள் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள உங்கள் நாட்டுக்கு வரும்போது அவர்களை ஆதரித்து உற்சாகப்படுத்துங்கள்: அயலகத் தமிழர் மாநாட்டில் உதயநிதி வேண்டுகோள் 

சென்னை: 

அயலகத் தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  

தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ம் ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழாவை சென்னையில் தொடங்கியது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்கிய மாநாடு நாளையும் நடைபெறும்.

இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

முதல் நாளான இன்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற்றினார். 

முன்னதாக அங்கு அமைக்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகளை அவர் திறந்துவைத்தார்.

திமுக ஆட்சியில் தமிழர்கள் எங்கு வளந்தாலும் அவர்களுக்கு தாயன்போடு அரவணைக்கும் விதமாக தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை என்று ஓர் அமைச்சையே ஏற்படுத்தி தலைவர் ஸ்டாலின் ஒரு திராவிட மாடலை உருவாக்கி தந்துள்ளார். 

தங்களது அரசு அயலகத் தமிழர்களை எப்போதும் முதன்மை படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் நம் நாட்டு வீரர்கள் உங்கள் நாடுகளில் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள வரும்போது அவர்களை ஆதரித்து உற்சாகப்படுத்தும்படி அயலகத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று உதயநிதி கூறினார்.

முன்னதாக கார்த்திகேய சேனாதிபதி வரவேற்புரையாற்றினார். அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இரு நாள் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வருகிறார். இறுதியில் அனைவருக்கும் நினைவுப்பரிசுகளை வழங்கினார். 

-ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset