நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது மீது அவதூறு: GAPEIM அமைப்பு உட்பட பல்வேறு இயக்கங்கள் நாடெங்கும் காவல் துறையில் புகார்

பினாங்கு: 

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது மீது அவதூறு கூறி குரல் பதிவு செய்த நபர் மீது GAPEIM அமைப்பு உட்பட பல்வேறு இயக்கங்கள் நாடெங்கும் காவல் துறையில் புகார் அளிக்க ஆரம்பித்துள்ளன.

தமிழ் பேசும் நல்லுலகில் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் இந்நாட்டு தமிழர்களுக்கு மட்டுமல்ல. உலகளாவிய தமிழர்களுக்கும் பெரும் தமிழ்ச் சொத்தாக நற்றமிழறிஞாரக விளங்கியவர்.  உலகத் தமிழ்மொழி வளர்ச்சிக்காக கவிஞர் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். 

இந்நாட்டு தமிழ்ச் சமூகத்தால் ஏற்று முழங்கப்பட்டுவரும் ‘காப்பியனை ஈன்றவளே’ என்னும் அமுதான தமிழ் வாழ்த்து பாடலையும் அதை எழுதிய ஐயா சீனி நைனா முகம்மதுவையும் மதம் மாறிய மிசனரிகள்... அதுவும் ஒரு முஸ்லிம்  என்று இழிவுப்படுத்தும் குரல் பதிவை வெளியிட்டவருக்கு எதிராக பினாங்கு இந்திய முஸ்லீம் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் ஜனவரி 10ஆம் தேதி பினாங்கு பட்டாணி ரோடு தலைமை காவல் நிலையத்தில் அக்குரல் பதிவினை கண்டித்து புகார் செய்தது.

நட்புறவும் சகோதரத்துவமும் கொண்டு வாழும் தமிழர்களான இந்து முஸ்லீம் இரு சமூகத்தினரிடையே இது போன்ற அபத்தமான, பொறுப்பற்ற  குரல் பதிவுகள் பிரிவினையையும், பேதைமையையும் உருவாக்கி சமூக அமைதியைக் குலைக்கும் என்பதால் காவல் நிலையத்தில் இதனை புகார் செய்துள்ளோம். 

காவல் துறையும், மலேசியாவின் பொது நலன்களுக்கும் மலேசிய மக்களின் வாழ்வியல் பாதுகாப்பிற்கும் பொறுப்பு வகிக்கும் நமது உள்துறை அமைச்சகமும் உடனடியாக அந்த நபரை விசாரனை செய்து இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் அமீனுல் ஹுசைனி கேட்டுக்கொண்டார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset