செய்திகள் விளையாட்டு
பாரா ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் வசிக்கும் இடத்தில் கிருமித்தொற்று
டோக்கியோ:
ஜப்பானில் உடற்குறையுள்ளோருக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் வசிக்கும் இடத்தில், ஊழியர் ஒருவருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர், ஜப்பானில் வசிப்பவர் இல்லை என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஆனால், அது குறித்து எந்த மேல் விவரமும் வெளியிடப்படவில்லை.
இதுவரை உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடைய 74 பேரிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தக்காரர்களும், போட்டி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், விளையாட்டாளர்கள் வசிக்கும் இடத்தில் இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதில்லை.
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி, எதிர்வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
அதில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 160 குழுக்களைச் சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 12:00 pm
ஜெர்மன் பண்டேஸ் லீகா கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
November 23, 2024, 11:59 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
November 22, 2024, 10:23 am
பெப் குவார்டியாலோவின் ஒப்பந்தம் மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிப்பு
November 22, 2024, 10:22 am
ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசிய கிறிஸ்டியானோ ரொனால்டோ
November 21, 2024, 8:35 am
13 ஆண்டுக்கு பின் இந்தியா வருகைதரும் மெஸ்ஸி: கேரளா கால்பந்து போட்டியில் களமிறங்குகிறார்
November 21, 2024, 8:31 am
மெஸ்ஸி உலக சாதனை: இந்தாண்டை வெற்றியுடன் முடித்த அர்ஜெண்டினா
November 20, 2024, 4:21 pm
டேவிஸ் கோப்பை: கண்ணீருடன் விடைபெற்ற நடால்
November 20, 2024, 8:42 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: ஜெர்மனி சமநிலை
November 19, 2024, 8:19 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மலேசியா - இந்தியா சமநிலை
November 19, 2024, 8:16 am