நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒரு வருடத்தில் 300 நாட்கள் உறங்கும் மனிதன்

புதுடில்லி: 

இந்தியா நாட்டின் மேற்கு கரை பகுதியில் வசித்து வரும் புர்ஹாகாம் என்பவர் ஒரு வினோதமான நோய்க்கு ஆட்பட்டுள்ளார். இவர் ஒரு வருடத்தில் 300 நாட்கள் உறங்கிக்கொண்டே இருப்பார் என்று சொல்லப்படுகிறது. 

நாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் அங்குள்ள மக்களால் கும்பகர்னன் என்று பரவலாக அழைக்கப்படுகிறார்.  புர்ஹாகாம் AXIS HYPERSOMNIA எனும் நோய்க்கு உள்ளாகியுள்ளார்.

சராசரியாக சாதாரணமாக மனிதர்கள் 6 முதல் 8 மணி நேரம் உறங்குவார்கள். ஆனால், இந்த நோய் கொண்டிருப்பவர்கள் தொடர்ச்சியாக 25 நாட்களுக்கு உறங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

இதுவரை இந்த நோய்க்குத் தகுந்த மருந்துகள் எதுவும் இல்லை. 20 முதல் 25 நாட்களுக்கு தொடர்ந்து உறங்கிக்கொண்டிருப்பதால்  அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவர் உறக்கத்தில் இருக்கும் போதே அவரை குளிப்பாட்டுவதும் உணவு வழங்குதலும் செய்வார்கள்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset