நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அயலகத் தமிழர் மாநாட்டிற்கு வருகை தந்துள்ள மலேசியப் பேராளர் குழுவிற்கு வரவேற்பு 

சென்னை:

சென்னையில் நடைபெற உள்ள அயலகத் தமிழர் மாநாட்டிற்கு வருகை தந்துள்ள மலேசியப் பேராளர் குழுவிற்கு விமான நிலையத்தில் வரவேற்பு வழங்கப்பட்டது.

பேராளர்களை அயலகத் தமிழர் மாநாட்டிற்கு வருகை தந்துள்ள மலேசியப் பேராளர் குழுவினரை 
தமிழ்நாடு அரசு வெளிநாட்டு தமிழர் நல வாரியத் துணை இயக்குனர் திரு ரமேஷ், வெளி நாட்டுவாழ் தமிழ் இந்தியர் சங்கம், மலேசியா தலைவர் ஃபிர்தௌஸ் கான் ஆகியோர் வரவேற்றனர். 

காலையில் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் தலைமையில் வருகை தந்த குழுவில் மிம்காய்ன் தலைவர் டத்தோ ஜமருல் கான், இஹசான் குழுமத்தின் தலைவர் டத்தோ பி வி அப்துல் ஹமீத், பிரெஸ்மாவின் துணைத் தலைவர் டத்தோ முஹ்ஸின், டத்தோ முஹம்மது அலி ஜின்னா, முஹம்மது காசிம் இடம் பெற்றிருந்தனர்.

மலேசிய குழுவினருக்கு டி நகரில் அமைந்துள்ள குற்றாலம் பார்டர் ரஹ்மத் உணவகத்தின் சென்னை கிளை சார்பாக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. 

May be an image of 10 people and text

உணவகத்தின் உரிமையாளர் முஹம்மது ஹசன், அவரது சகோதரர் அப்துல் காதர் மொஹைதீன் வந்திருந்த மலேசியா விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தனர்.

விருந்தபசரிப்பில்  டத்தோ ஜமருல் கான், டத்தோ  பி வி அப்துல் ஹமீத், டத்தோ முஹ்ஸின், முஹம்மது காசிம், முஹம்மது சதக் அறக்கட்டளையின்  நிர்வாக இயக்குனர் அஹ்மத் சாஜித், ராஜா கண்ணன், தமிழ் கலைக் கலாசார சங்கத் தலைவர், கோலாலம்பூர்,
ஜெயசீலன், பிராவாசி லீகல் செல் மலேசியத் தலைவர், நம்பிக்கை ஊடகத்தின் தலைமை ஆசிரியர் ஃபிதாவுல்லாஹ் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது. 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset