நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மறைந்த நடிகர் விஜயகாந்த இல்லத்திற்கு சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் வருகை

சென்னை : 

மறைந்த நடிகர் விஜயகாந்த இல்லத்திற்கு சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் வருகை தந்துள்ளார். 

இதனை அவர் தம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மறைந்த நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவனருமான நடிகர் விஜயகாந்த கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி காலமானாதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி, திருமதி பிரேமலதா மற்றும் மகன் விஜய் பிரபாகரனை யுனேஸ்வரன் சந்தித்துள்ளார். 

மலேசியா மக்கள் நீதி கட்சி சார்பாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் சார்பாகவும் அவர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதுமட்டுமல்லாமல், அவரது நினைவிடத்திற்கு சென்று ஆசிப் பெற்றதாகவும் யுனேஸ்வரன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

அங்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது நினைவிடம் பாக்க வந்திருந்ததாகவும் அங்கு அவர்களுக்கு உணவு வழங்கி அவரது கொள்கையைப் பின் பற்றி வரும் செயல் தமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

May be an image of 6 people, flower and temple

ஒரு தலைவன் என்னவெல்லாம் நல்ல விஷயங்களையும், தர்மங்களையும் செய்திருப்பார் என்று தாம் நன்கு உணர்ந்து கொண்டதாகவும் அவரது ஆத்மா சாந்தியடைய தாம் பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் அவர் கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset