நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கவியருவி பேராசிரியர் அப்துல் காதருக்கு பவளவிழா; கடின உழைப்பு, சேவைக்கான அங்கீகாரம்: டத்தோஸ்ரீ சரவணன்

வாணியம்பாடி:

கவியருவி பேராசிரியர் அப்துல் காதருக்கு பவளவிழா இன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

இது அவரின் உழைப்புக்கும் சேவைக்கும் கிடைத்த அங்கீகாரம் என்று மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

தமிழ்நாட்டின் வாணியம்பாடியில், கவியருவி பேராசிரியர் அப்துல் காதர் பவளவிழாவில் பூக்களாலும் பூகம்பம் நிகழலாம் எனும் நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு டத்தோஸ்ரீ சரவணன் பேருரை ஆற்றினார்.

கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்களிப்பு செய்துள்ள பேராசிரியர் அப்துல் காதருக்கான பவளவிழாவில் சிறப்புப் பிரமுகராகக் கலந்துக் கொள்வதில் மகிழ்ச்சி.

10 ஆண்டுகளுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு பவளவிழா நடந்த போது, அவ்விழாவை தன் தோளில் ஏந்தி செயல்பட்டவர் பேராசிரியர் அப்துல் காதர்.

May be an image of 3 people, dais and text

ஓர் இளைஞரை போன்று உலகமெங்கும் ஓடி அங்குள்ள அறிஞர்களை ஒன்றுப்படுத்தினார்.

இன்று வாணியம்பாடியில் உலகமே ஒன்று சேர்ந்து அவருக்கு பவளவிழா நடத்துவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

ஒரு மனிதன் மனித நேயத்தோடு போகும் வழியெல்லாம் பூக்களை தூவி சென்றால் திரும்பி வரும் போது பூக்களை தான் மிதித்து வருவீர்கள் என்பதை இந்த விழா குறிக்கிறது.

காதர் ஐயாவும் நானும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பாக இருந்து வருகிறோம்.

என் தலைமையில் 2004ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்ற மலேசிய கம்பன் விழாவில் ஐயா கவிரங்கத்தின் தலைவராக செயல்பட்டார்.

May be an image of 7 people and dais

May be an image of 6 people, dais and text

அப்போது மதியம் 1 மணிக்கு அவர் பேச தொடங்குகிறார். கூட்டத்தினர் சாப்பிடுவதற்காக கலைந்து செல்கின்றனர்.

அப்போது அவர் மணி 1 போகலாம், ஒன்னுக்கு கூட போகாமல் அமர்ந்திருக்கும் சபையினரே என்ற என்று அவர் பேச தொடங்கினார்.

அதன் பின் சத்தியமாக கூட்டம் கலையவே இல்லை. இந்த சம்பவம் இன்னும் என் கண் முன்னே நிழலாடுகிறது என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார். கூட்டத்தை அப்படியே கட்டுப்போட்டு அமர வைத்தார் பேராசிரியர் ஐயா.

May be an image of 4 people

May be an image of one or more people

இன்று மலேசியா, இலங்கை என பல நாடுகளில் இருந்து மக்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.

அவர் எந்த பதவியிலும் இல்லை. ஆனால் அவர் மீதான அதீத அன்பு, பற்றின் காரணமாகவே அனைவரும் இங்கு கூடியுள்ளோம்.

மலேசியாவில் எனக்கு பொன்விழா நடைபெற்றது. அப்போது காதர் ஐயாவிடம் வாழ்த்துரை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவர் மருத்துவமனையில் மிகவும் முடியாமல் இருந்தார். மருத்துவமனையில் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் எனக்காக வாழ்த்துரையை வழங்கினார்.

அப்படியொரு மாமனிதருக்கான பவளவிழாவில் உரையாற்றுவதில் பெருமைக் கொள்கிறேன் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset