நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனியார் உயர்க்கல்வி கூடங்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் அனைத்துலக மாணவர்களின் வருகை குறைவாக உள்ளது : பிரதமர் அன்வார் கருத்து 

கோலாலம்பூர்: 

வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களிடம் தனியார் உயர்க்கல்வி கூடங்கள் அதிகமான கட்டணங்களை வசூலிப்பதால் அவர்கள் மலேசியாவில் கல்வியைத் தொடர்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

தனியார் உயர்க்கல்வி கூடங்களில் விதிக்கப்படும் கட்டணங்களைக் கல்வி அமைச்சு முடிவு செய்வதில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.  

உள்ளூர் மாணவர்களுக்கான கட்டணம் சற்று குறைக்கப்பட்டுள்ளது.

தனியார் உயர்க்கல்வி கூடங்கள் அதிகமான கட்டணங்களை வசூலிப்பதால் இனி வரும் காலங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிகை குறைவதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதைப் பிரதமர் ஒப்புக் கொண்டார். 

சீனாவிலிருந்து வரும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரிக்க தனியார் உயர்க்கல்வி கூடம் அனுமதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதா என்ற கேள்விக்குப் பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset