நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

40 வயதிற்குட்பட்டவர்களிடையே திடீர் மரணச் சம்பவங்கள் அதிகரிப்பு: மருத்துவர் தகவல்

கோலாலம்பூர்:

40 மற்றும் அதற்கும் குறைவான வயதுடையவர்களிடையே அதிகரித்து வரும் திடீர் மரணச் சம்பவங்களுக்கு இதயத் தடுப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன. 

கோவிட்-19 நடமாட்டக் கட்டுபாடு காலத்தில் செயல்பாடுகள் இல்லாத நீண்ட காலத்திற்குப் பிறகு திடீரென உடல் செயல்பாடு அதிகரித்ததன் விளைவாக இருதய நோய் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக ஹார்ட் பிட் இ-ஈசிபி வெல்னஸ் சென்டர் நிறுவனர் டாக்டர் எஸ்.டெனேஷ் கூறினார்.

அந்த நேரத்தில் மக்களிடையே உடல் உடற்பயிற்சி நடவடிக்கைகள் குறைவாக இருந்தன. 

உடல் நீண்ட காலமாக பயிற்சி பெறாதபோது, ​​அஃது உடலுக்கு ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மன அழுத்தம், போதிய தூக்கமின்மை மற்றும் இதய நோய்களின் வரலாறு ஆகியவையும் 40 மற்றும் அதற்கும் குறைவான வயதுடையவர்களிடையே அதிகரித்து வரும் திடீர் மரணச் சம்பவங்களுக்குக் காரணிகளாக இருப்பதாக டாக்டர் டெனேஷ் கூறினார்.

எஸ்.ஏ.டி.எஸ் மற்றும் மாரடைப்பு அறிகுறிகள் விரைவாக ஏற்படுவதால் அவற்றைக் கூறுவது கடினம் என்றும், வாழ்க்கை முறை, உணவுமுறை மாற்றங்கள் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset