நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அதானி குழுமத்துக்கு எதிராக சிறப்பு விசாரணைக்கு மறுப்பு: எதிர்க்கட்சிகள் விமர்சனம்

புது டெல்லி:

அதானி குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் அதானிக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் தனது பங்குகளை மிகைப்படுத்தி விற்பனை செய்வதாக ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டுகள் குறித்து செபி நடத்திவரும் விசாரணையில் நம்பிக்கை உள்ளதாகவும், அந்த அமைப்பே தொடர்ந்து விசாரிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற தொழிலதிபர் கௌதம் அதானி, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் உண்மை வெற்றி பெற்றுள்ளது.இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களுடைய பங்களிப்பு தொடரும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள சில அம்சங்கள் செபிக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது என காங்கிரஸ் புதன்கிழமை விமர்சித்தது,

அதானி வழக்கில் நடுநிலையான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset