நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ICUவில் அனுமதிக்க குடும்பத்தினரின் ஒப்புதல் தேவை: இந்திய சுகாதார அமைச்சகம்

புது டெல்லி:

மருத்துவமனைகளில் நோயாளிகளை குடும்பத்தினரின் ஒப்புதல் பெறாமல் ICU எனும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கக் கூடாது என்று இந்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக  24 மருத்துவ நிபுணர்கள் வகுத்த வழிகாட்டுதல்களை ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், உயிர் வாழ்வதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத சமயங்களில், அந்த நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சையளிப்பது பயனற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பு செயலிழப்பு, சுவாச அல்லது உறுப்பு ஆதரவு ஆதரவு தேவைப்படும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மோசமடைந்த மருத்துவ நிலை அல்லது சீரழிவை எதிர்நோக்கும் நோய் ஆகியவை தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கான அளவுகோல்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset