நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

Punctuality Airport: உலகளவில் ஹைதராபாத், பெங்களூரு இடம்பெற்றன

 புது டெல்லி:

சர்வதேச அளவில் கடந்த ஆண்டு சரியான நேரத்தில் விமானங்கள் இயக்கி  punctuality airport என்ற பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 விமான நிலையங்களின் ஹைதராபாத், பெங்களூரு 2, 3ஆவது இடத்தை பிடித்துள்ளன.

"சிரியம்' என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த ஆய்வு அறிக்கையில், சரியான நேரத்தில் விமானங்கள் இயக்கப்பட்ட முதல் 10 பெரிய அளவிலான விமான நிலையங்களின் சர்வதேச தரவரிசை பட்டியலில், அமெரிக்காவின் மினியாபொலிஸ் செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம் 84.44 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

அடுத்தபடியாக, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் 84.42 சதவீதத்துடன் 2ஆம் இடத்திலும், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் 84.08 சதவீதத்துடன் 3ஆம் இடத்திலும் உள்ளன.

சரியான நேரத்தில் இயங்கும் விமான நிறுவனமாக தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் ஏவியன்கா ஏர்லைன்ஸ் இருக்கிறது.

குறைந்த கட்டணம் கொண்ட விமான நிறுவனங்களில் தென்னாப்பிரிக்காவின் சஃபையர் 92.36 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் ஒரே இந்திய நிறுவனமாக இண்டிகோ 82.12 சதவீதத்துடன் 8ம் இடத்தில் உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset