நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூரில் மீண்டும் கலவரம்

இம்பால்:

மணிப்பூரில் பழங்குடியினர் அதிகம் வாழும் தேங்னேபால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் கடந்த மே மாதம் முதல் மோதல் ஏற்பட்டு வருகிறது.

பாஜக ஆட்சி நடைபெறும் மணிப்பூரில்  இந்த மோதலில் இதுவரை 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மைதேயி சமூகத்தினர் அதிகம் வாழும் தேபல் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் திங்கள்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்தனர். இச் சம்பவத்தால் மைதேயி சமூகத்தினர் வசிக்கும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset