நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல துறைகளில் சாதனை மாணவர்களை டேஃப் கல்லூரி உருவாக்குகிறது: டத்தோ இப்ராஹிம் ஷா

சிரம்பான்:

பல துறைகளில் சாதனை மாணவர்களை டேஃப் கல்லூரி உருவாக்குகிறது என்று அக் கல்லூரியின் நிர்வாகி டத்தோ இப்ராஹிம் ஷா கூறினார்.

1988ஆம் ஆண்டு சிரம்பானில் டேஃப் கல்லூரி உருவாக்கப்பட்டது.

மஇகாவின் முன்னாள் சாதனைத் தலைவர் துன் சாமிவேலு சிந்தனையில் இக் கல்லூரி உருவானது.

நம் இந்திய மாணவர்களுக்கு தொழில் திறன் கல்வியை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் இக் கல்லூரி தொடங்கப்பட்டது.

இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்களை இக் கல்லூரி உருவாக்கியுள்ளது.

பல ஆண்டுகளாக தொடர்ந்து இக் கல்லூரி வெற்றி பாதையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தற்போதைய  மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டேஃப் கல்லூரிக்கு எம்ஐஇடி வாயிலாக முழு ஆதரவு வழங்கி வருகிறார்.

இவ்வேளையில் அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டேஃப் கல்லூரியில் பயின்ற, பயிலும் மாணவர்கள் தற்போது பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.

குறிப்பாக அம்மாணவர்கள் சொந்தமாகவே கோ கார்ட் கார், ட்ரோன் தொழில்நுட்பம் உட்பட பலவற்றை தயாரித்துள்ளனர்.

அம்மாணவர்களின் இச்சாதனை கல்லூரிக்கு கிடைத்த வெற்றியாக விளங்குகிறது.

ஆகவே டேஃப் கல்லூரியில் இணைந்து தொழில் திறன் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று டத்தோ இப்ராஹிம் ஷா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset