நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தென்மாவட்ட மக்களுக்கு 3 லாரிகளில் 22 டன் நிவாரணப் பொருட்கள்: மநீம தலைவர் கமல்ஹாசன்

சென்னை: 

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 லாரிகளில் 22 டன் அரிசி, பால் பவுடர், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் மநீம தலைவர் கமல்ஹாசன் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் கூறியது: 

"மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரையில், இது நற்பணி மையமாக இயங்கிக்கொண்டிருந்தது. தேடித் தீர்ப்போம் வா என்பதுதான் எங்களுடைய குரலாக இருந்தது. 

பேரிடர் வந்தாலும் வராவிட்டாலும், மநீமவினர் இதுபோன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். அதை தினமும் செய்வதையே வாழ் முறையாக கொண்டவர்கள். எனவே, அவர்கள் செய்துவரும் உதவிகளை தெரியப்படுத்த வேண்டியது என்னுடைய கடமை.
 
மநீம சார்பில் முதற்கட்டமாக, தூத்துக்குடியில் உள்ள மக்களுக்காக ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

இதை திருநெல்வேலி மநீம மண்டல செயலாளர் ஒருங்கிணைத்தார். தற்போது லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 324-எம் உடன் இணைந்து 22 டன் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடைகள் இன்று 3 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

சென்னை வெள்ள சேதத்தின்போது, மனிதநேயத்துடன் களமிறங்கி உதவிக்கரம் நீட்டியவர்கள், இப்போது தென் மாவட்டங்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். 

மநீம சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று லாரிகள் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பிவைக்கப்படும். 

உதவி தேவைப்படும்போது, இருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தெரிவிக்கப்படும். மநீம நிர்வாகிகள் மற்றும் ஊடகவியாலாளர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset