நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இண்டிகோ விமான சாண்ட்விச்சில் புழு

 புது டெல்லி:

இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததாக பெண் பயணி விடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். இதற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

தில்லியில் இருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் வெள்ளிக்கிழமை பயணம் செய்த குஷ்பு குப்தாவுக்கு பரிமாறப்பட்ட சாண்ட்விச்சில் உயிருடன் புழு இருப்பதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

சாண்ட்விச்சில் புழு இருப்பது குறித்து விமானப் பணியாளர்களிடம் புகார் அளித்த பின்பும் மற்ற பயணிகளுக்கு சாண்ட்விச் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டது என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த விடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ விமான நிறுவனம், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset