நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உல்ஃபா போராளிகள் அமைப்புடன் இந்திய அரசு ஒப்பந்தம்

புது டெல்லி:

இந்திய அரசுடன் அசாமின் உல்ஃபா போராளிகள் அமைப்பு அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டது. இது அசாம் மாநில மக்களுக்கு மிகப்பெரிய நாள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இந்த அமைதி ஒப்பந்தம் அமித் ஷா மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ஆகியோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது . அப்போது அமித் ஷா கூறுகையில், உல்ஃபா அமைப்பின் வன்முறைகளால் அசாம் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வந்தது. 1979 முதல் 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தற்போது வன்முறையை கைவிட ஒப்புக்கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள் அசாம் மக்களுக்கு மிகப் பெரிய நாள் என்றார்.

உல்ஃபா பிரிவினருக்கும் அரசுக்கும் இடையே 12 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கது என்று முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset