நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குஜராத்தில் மருத்துவத்துக்காக மது குடிக்க அனுமதி கோருவது அதிகரிப்பு

அகமதாபாத்:

குஜராத்தில் மருத்துவக் காரணங்களுக்காக மது வாங்க உரிமம் பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 58 சதவீதம் அதிகரித்துள்ளது.

குஜராத்தில் கடந்த 2020ம் ஆண்டு 27,452 பேர் மது உரிமம் வைத்திருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 43,470 ஆக அதிகரித்துவிட்டது. மாநில மக்கள்தொகை சுமார் 6.7 கோடியாக உள்ளது.

மருத்துவக் காரணங்களுக்காக மது உரிமம் வழங்கப்படுவது தவிர, வெளிநாட்டவர்கள், வெளிமாநிலத்தவர்கள் குஜராத் வந்தால் அவர்கள் கோரிக்கையின் பேரில் மது உரிமம் அளிக்கப்படுகிறது. ஒரு வாரம் வரை இந்த உரிமம் செல்லுபடியாகும்.

மகாத்மா காந்தி மது விலக்கு கொள்கையை தீவிரமாக வலியுறுத்தி வந்ததால் அவர் பிறந்த மாநிலமான குஜராத்தில் மதுவுக்கு தடை உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset