நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மீண்டும் நடைப்பயணத்தை தொடங்குகிறார் ராகுல்

புது டெல்லி:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரும் ஜனவரி 14ம் தேதி முதல் இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை மணிப்பூரில் இருந்து தொடங்குகிறார்.

பாரத நியாய யாத்திரை என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த நடைப்பயணம் மணிப்பூரில் தொடங்கி நாகலாந்து, அஸ்ஸாம், மேகாலயம், மேற்குவங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிஸா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களைக் கடந்து கடைசியாக மகாராஷ்டிரத்தில் மார்ச் 20-ம் தேதி முடிவடைகிறது. 6,200 கி.மீ. தொலைவுக்கு அவர் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என்ற பெயரில்  தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் முதல்கட்ட நடைப்பயணம் மேற்கொண்டார்.

அக் கட்சியின் பொதுச் செயலாளரான கே.சி.வேணுகோபால் கூறுகையில், "மணிப்பூர் மக்களின் காயங்களுக்கு மருந்திடும் விதமாக, நடைப்பயணத்தை அங்கு தொடங்க முடிவு செய்யப்பட்டது' என்றார்.

முன்னதாக, ஹரியாணா, ஜாஜ்ஜர் மாட்டத்தின் சஹாரா கிராமத்தில் உள்ள வீரேந்தர் மல்யுத்த களத்துக்கு புதன்கிழமை சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பஜ்ரங்  புனியா உள்பட மல்யுத்த வீரர்கள் பலரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீரர்கள் போராடி வரும் சூழலில், அவர்களுடனான ராகுலின் இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset