நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

UAE கச்சா எண்ணெய்க்கு ரூபாய் மூலம் பரிவர்த்தனை

புது டெல்லி:

UAE யிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை முதன் முறையாக ரூபாய் மூலம் வாங்கியுள்ளது இந்தியா.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், உக்ரைன் போருக்குப் பிறகு மேற்கு நாடுகளால் வர்த்தக தடை விதிக்கப்பட்ட ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்ததால் ஆயிரக்கணக்கான கோடி சேமிக்கப்பட்டது.

பல்லாண்டுகளாக கச்சா எண்ணெய் இறக்குமதி பரிவர்த்தனைகளுக்கு சர்வதேச நாணயமான அமெரிக்க டாலர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எல்லை தாண்டிய ரூபாய் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, 18 நாடுகளுடன் ரூபாயில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள 12க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.

அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திடம் 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்திய ஆயில் நிறுவனம் வாங்கியது என்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset