நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் குவா மூசாங் - லோஜிங் சாலையில் வெள்ளம்: 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன

குவா மூசாங்:

தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் இங்குள்ள ஜாலான் குவா மூசாங் - லோஜிங் சாலை வெள்ளத்தால் மூழ்கியது.

இதனால் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் சிக்கி நிற்கின்றன.

இன்று காலை 6 மணி முதல் அச் சாலையில் வெள்ள நீர் தேங்கத்  தொடங்கியது.

தற்போது அச் சாலை கடக்க முடியாத அளவிற்கு வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.

பொது விடுமுறையை முன்னிட்டு மக்கள் அச்சாலையை பெரும் அளவில் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தற்போது அச்சாலை முழுமையாக போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

இதனால் பலரின் பயணங்கள் தடைப்பட்டு போனது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset