நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திவேட் தொழில் திறன் கல்வி திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்:

செயற்கை நுண்ணறிவு,ரோபோட்டிக்ஸ் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க திவேட் எனப்படும் தொழில் திறன் கல்வி திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டும் போதாது. மாறாக, அந்தத் தொழில்நுட்பத்தைக் கையாளக் கூடிய திறமையான பணியாளர்கள் தேவை என்றார் பிரதமர். 

நாட்டில் தற்போது செயற்கை நுண்ணறிவு,ரோபோட்டிக்ஸ் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் கொண்ட பணியாளர்களின் பற்றாக்குறையைப் பிரதமர் அன்வார் ஒப்புக் கொண்டார். 

வலுவான பயிற்சித் திட்டங்கள்,  திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் இதை நிவர்த்தி செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset