நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளியை முன்னிட்டு உயர் கல்விக்கூட மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

தீபாவளியை முன்னிட்டு உயர் கல்விக்கூட மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமச்சந்திரன் இதனை கூறினார்.

தீபாவளி திருநாள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இப்பெருநாளை முன்னிட்டு அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் அரசு உயர் கல்விக் கூட மாணவர்களுக்கான விடுமுறை விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

குறிப்பாக வரும் அக்டோபர் 29ஆம் தேதி காலை வரை உயர் கல்விக் கூட மாணவர்களுக்கு வகுப்புகள் உள்ளது.

இந்த வகுப்புகளை முடித்து கொண்டு எப்படி வீட்டிற்கு செல்வது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்வதற்கு அவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

அதற்கு அவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட வேண்டும். இதை உயர் கல்வி அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்விவகாரத்தை உயர் கல்வி அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

ஏற்கனவே இது குறித்து பேசப்பட்டுள்ளதால் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset