நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Op Tiris 3.0 நடவடிக்கையின் வாயிலாக 1,561 டீசல் மோசடி வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அர்மிசான் அலி

கோலாலம்பூர்:

இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் 19-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட Op Tiris 3.0 சோதனை நடவடிக்கையின் வாயிலாக 1,561 டீசல் மோசடி வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி தெரிவித்தார்.

நாடு முழுவதும் 30,634 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்தச் சோதனை நடவடிக்கைகளின் மூலம் 31 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 13.8 மில்லியன் லிட்டர் மானியத்துடன் கூடிய டீசல் கைப்பற்றப்பட்டது. 

கூடுதலாக, ஜனவரி முதல் கடந்த அக்டோபர் வரை, பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி, சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து வருமானம் (AMLATFPUAA) சட்டம் 2001 இன் கீழ் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் ஆறு விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளது என்று அவர் கூறினார். 

மலேசியாவில் குறிப்பாக நாட்டின் எல்லைகளில், மானிய விலையில் வழங்கப்படும் டீசலை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துத் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதற்கான அமைச்சகத்தின் முன்மொழிவு குறித்து லுபோக் ஹன்த்து நாடாளுமன்ற உறுப்பினர் Roy Angau Anak Gingkoi  கேள்விக்கு அர்மிசான் இவ்வாறு அவர் பதிலளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset