நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுகாதாரத் துறையில் மலேசியா, இந்தியா, ஆசியான் இடையிலான உறவு வலுப்படுத்தப்படும்: லுக்கானிஸ்மான் 

கோலாலம்பூர்:

2024 மலேசியா பார்மா அண்ட் ஹெர்த்கேர் எக்ஸ்போ எனப்படும் மருந்தக மற்றும் சுகாதாரக் கண்காட்சியில் மலேசிய-இந்திய வர்த்தக மன்றத்திற்கும் ஆசியான்- இந்தியா வர்த்தக மன்றத்திற்கும் இடையே ஏற்படுத்தப்படும் கூட்டு, மலேசியா, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கிடையே மருத்துவத் துறையில் அணுக்கமான ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும் என்று சுகாதாரத் துறை துணை அமைச்சர் டத்தோ லுக்கானிஸ்மான் அவாங் சவுனி தெரிவித்தார்.

அண்மைய ஆண்டுகளில் குறிப்பாகக் கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் நாம் எதிர்நோக்கி வரும் சவால்கள் சுகாதாரத் துறை கட்டமைப்பில் ஒத்துழைப்பு, புத்தாக்கம், புத்துயிரூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளன என்று அவர் கூறினார்.

அனைவருக்கும் சுகாதாரத்தை புதுமைப்படுத்துதல் எனும் கருப்பொருளில் 2024 மலேசியா பார்மா அண்ட் ஹெர்த்கேர் எக்ஸ்போ நடைபெறுகிறது. 

இது முழுமையாகப் பதிலளிக்க கூடிய நமது கூட்டு எதிர்பார்ப்புகளை முழுமையாக
எதிரொலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

முக்கியமான தருணத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடுகள் மூலம் வழங்கப்படும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த மாற்றத்தின் முன்னணியில் நமது சுகாதாரத் துறைகள் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இந்த மூன்று நாள் கண்காட்சியில் இந்தியாவின் மருத்துவச் துறை சேர்ந்த 30 கண்காட்சியாளர்களோடு மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பேராளர்களும் பங்கேற்றுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset