நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மும்பை இந்தியன் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித்: டிரெண்ட் ஆகி வரும் 'ஷேம் ஆன் மும்பை இந்தியன்ஸ்’ ஹேஷ்டேக் 

மும்பை:

குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவாரென மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதனால் ரோஹித் சர்மாவின் ரசிகர்களும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் விரக்தியில் இருக்கிறார்கள். அவர்களது எதிர்ப்பை காட்டும் விதமாக இன்ஸ்டாவில் மும்பை இந்தியன்ஸ் பக்கத்தினை (அன்பாலோவ்) பின் தொடர்வதில் இருந்து விலகி வருகிறார்கள்.

அண்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா தான் முன்பு விளையாடிய அணியான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தார். 

கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியை பாண்டியா கேப்டனாக வழிநடத்தி வந்தார். அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவதாக எடுத்த முடிவுக்கு மதிப்பளித்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் விற்றது குஜராத் டைட்டன்ஸ்.

சமூக வலைதளத்தில் 'ஷேம் ஆன் மும்பை இந்தியன்ஸ்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் எம்.ஐ. அணி வீரர் சூர்யகுமார் யாதவ் இதயம் உடையும் எமோஜியை தனது எக்ஸ், இன்ஸ்டாகிராம் பதிவுகளில் பதிவிட்டுள்ளார். 

ரோஹித்துக்குப் பிறகு பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவ் கேப்டனாகும் வாய்ப்பு இருந்தது. ஹார்திக் பாண்டியா திடீரென கேப்டனானதால் ரசிகர்கள் உள்பட வீரர்களுமே அதிருப்தியடைந்துள்ளார்கள். 

 ஏற்கனவே, ஜஸ்ப்ரித் பும்ரா, “அமைதியே அனைத்துக்கும் பதில்” எனப் பதிவிட்டு இருந்தார். தற்போது சூர்யகுமாரின் பதிவும் வைரலாகி வருகிறது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset