நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய சூப்பர் லீக்: சிலாங்கூர் வெற்றி

ஷாஆலம்:

மலேசியா சூப்பர் லீக் என்ன கால்பந்து போட்டியில் சிலாங்கூர் அணியினர் வெற்றி பெற்றனர்.

எம்பிபிஜே அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சிலாங்கூர் அணியினர் போலீஸ்படை அணியை சந்தித்து விளையாடினர்.

 இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிலாங்கூர் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் போலீஸ் படை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

சிலாங்கூர் அணியின் வெற்றி கோல்களை  பைசால் ஹலிம், பிராடன் கான், ரிச்மோண்ட் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு இடத்தில் சபா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கெடா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

திரெங்கானு அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் பேரா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset